கூடங்குளம் அணுமின் நிலையக் கட்டுமானப் பணிகள் 80 விழுக்காடு
முடிவடைந்துவிட்டன.தொழில் நுட்ப்ப பணிகள் தற்போது தொடங்கப்
பட்டுள்ளன். 2007-ம் ஆண்டில் ஆணுமின் நிலையம் செயல்படத் துவங்கும்.
முதல் கட்டமாக 2000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்' என
திட்ட தொழில் நுட்ப இய்க்குநர் குவாசா அலெக்ஸாண்டர் தெரிவித்து
உள்ளார்.
ஆராய்ச்சி மேற் கொள்வதற்காக வெள்ளி கிரகத்திற்கு ஐரோப்பா விண்கலம்
அனுப்பியுள்ளது. ரஶ்யாவில் உள்ள பைக்கனூர் விண்வெளி மையத்திலிருந்து 09.11.2005 அன்று அனுப்பப்பட்டது. 'வீனஸ் எக்ஸ்பிரஸ்' என்றழைக்கப்படும்
இந்த விண்கலம் வெள்ளி கிரகத்தைச் சென்றடைய 153 நாட்கள் ஆகும்.
வெள்ளி கிரகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் முதல் விண்கலம் இது என்பது குறிப்பிடதக்கது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் அனைத்து விலங்குகள் குறித்த
விவரங்களை இன்டர்நெட் மூலம் பார்க்க சிறப்பு வசதிகள் ய்யப்பட்டுள்ளன். இதற்காக உயிரியல் பூங்காவின் இணையதளம், டி.சி.எஸ். நிறுவனத்தின் உதவியுடன் முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
நாட்டின் தொழில் நிறுவனங்களின் வளர்சிக்கு இடையூறாக இருக்கும் தடைக் கற்களை அகற்ற அரசு உறுதி பூண்டுள்ளது. அதே நேரத்தில் நாட்டிலுள்ள
ஏழை மக்களின் வாழ்க்கையையும் முன்னேற்றியாக வேண்டும். அப்போதுதான் தடையற்ற வளர்ச்சி பாதையில் செல்லமுடியும் என்று பிரமர் டாக்டர்.மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment