Wednesday, March 15, 2006

4.அறன் வலியுறுத்தல்

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தின்ஊஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.

அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்குஇல்லை கேடு.

ஒல்லும் வகையான் அறவினை ஒவாதே
செல்லும்வாய் எல்லாம் செயல்.

மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற.

அழுக்காறு அவாவெகுளி இன்னாசொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

அன்று அறிவாம் என்னாது அறம்செய்க:மற்றுஅது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.

அறத்துஆறு இதுஎன வேண்டா:சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் ஆஃதுஒருவன்
வாழ்நாள் வழிஅடைக்கும் கல்.

அறத்தான் வருவதேஇன்பம் மற்று எல்லாம்
புறத்த புகழும் இல.

செயல்பாலது ஓரும் அறனே:ஒருவற்கு
உயற்பாலது ஒரும் பழி.

No comments: