Wednesday, March 22, 2006

விதவை மறுமணம் பற்றிப் பாரதியின் கருத்தும்-விவாதமும்

ஆணும் பெண்ணும் சமாகத் தோன்றிய மனித இனத்தில் பெண் உயர்ந்த
நிலையைப் பெறுவதைப் புராதன சமுதாயத்தில் காணமுடிகிறது.
தனிச் சொத்துடைமை உருவான்போது அதன் தொடர் விளை வாகப் பெண்ணை
அடிமையாக்கும் நிலை ஏற்ப்பட்டது. பொருளாதாரக் காரணிகளுக்காக
உருவாக்கப்பட்டது பெண்ணடிமைத்தனம் அரசியலால் வளர்த்தெடுக்கப்பட்ட
பண்பாட்டால் பாதுகாக்கப்பட்டது. ஆண்மட்டுமே ஆளத்தகுதியுடையவன் என்ற
கருத்துவின் மூலம் முடிவெடுக்கும் அதிகாரங்கள் ஆணுக்குரியதாக
வரையறுக்கப்பட்டன. இந்தியாவில் பெண்ணடிமைத்தன்ம் ஆண் மேலாதிக்க
உணர்யுகளோடும், முதலாளித்துவ சமூக அமைஉபோடும் மத சாதிய
மரபுகளோடும்,பின்னிப் பிணைந்து வளர்க்கப்பட்டது.
"தையல் சொற்கேளேல்"
"பேதமை என்பது மாதர்க்கணிகலம்"
"பெண்ணாகி வாந்ததொரு மாயப் பிசாசு"
"பெண்கள் சிரிச்சாப் போச்சு""புகையிலை விச்சா போச்சு"
"அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு"
"கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஸ்ன்"
"சாண்பிள்ளையானாலும் ஆண்பிள்ளை"
போன்ற வார்த்தைகளே புழங்கிக் கொண்டிருந்த காலக் கட்டத்தில்-
"தையலை உயர்வு செய்"
"பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன்"
"பெண்களறிவை வளர்த்தால் வையம் பேதமை அற்றிடும்"
"ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்கும்"
"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தார்"
"பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா"
என்று பாடிச் சமூகத்தில் பெண்ணென்பவளை மனுஶியாகப் பாவித்தவன் பாரதி.
தொடரும்.................

1 comment:

Gnaniyar @ நிலவு நண்பன் said...

நல்ல பதிவு ராஜ்குமார்.

விதவைகள் வந்தால் ஒதுங்குவது - விதவைகளை வீட்டில் நடக்கும் விசேசங்களுக்கு அழைக்க மறுக்கும் மூடத்தனம் - விதவைகளை ஒரு அற்பப் பிராணியாக பார்ப்பது எல்லாவற்றையும் அறவே ஒழிக்கும்
முக்கியப் பொறுப்பு இன்றைய இளைஞர்களின் கைகளில்தான் இருக்கின்றது.
என்னுடைய "மலர்கள் பேசினால்" என்ற கவிதையில் கூட இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றேன்

தாசிகளின் கூந்தலிலும்
தவமிருக்கும் எங்களுக்கு
விதவைக்கு மட்டுமேன்
விதிவிலக்கு?

விதவைகள் வந்தால் ஒதுங்குவது - விதவைகளை வீட்டில் நடக்கும் விசேசங்களுக்கு அழைக்க மறுக்கும் மூடத்தனம் - விதவைகளை ஒரு அற்பப் பிராணியாக பார்ப்பது எல்லாவற்றையும் அறவே ஒழிக்கும்
முக்கியப் பொறுப்பு இன்றைய இளைஞர்களின் கைகளில்தான் இருக்கின்றது.