வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுஉணரற் பாற்று.
துப்பார்க்குத் துப்புஆய துப்புஆக்கித் துப்பார்க்குத்
துப்பாஆய தூஉம் மழை.
வீண்இன்று பொய்ப்பீன் விரிநீர் வியனுலகத்து
உன்நின்று உடற்றும் பசி.
ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளம்குன்றிக் கால்.
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றுஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றுஆங்கே
பசும்புல் தலைகாண்பது அரிது.
நெடும்கடலும் தன்நீர்மை குன்றும் தடித்துஎழிலி
தான்நல்காது ஆகி வீடின்.
சிறப்போடு பூசனை செல்லது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்காது எனின்.
நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
No comments:
Post a Comment