Tuesday, May 02, 2006

பாஞ்சாலங்குறிச்சி

  • சிறையில் 63 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த இந்தியப் புரட்சித் தலைவர்?
    விடை: ஜட்டின் தாஸ்.
  • வேதங்களை நோக்கி திரும்பி செல்லுங்கள் என கூறியவர்?
    விடை: தயானந்த சரஸ்வதி.
  • கி.பி.19-ம் நூற்றாண்டில் இளம் வங்காள இயக்கத்துக்கு ஊக்கமளித்தவர்?
    விடை: ஹென்றி விலியன் டிரோசியோ.
  • இந்திய மறுமலர்ச்சியின் விடிவெள்ளி என அழைக்கப்படுபவர்?
    விடை: ராஜாராம் மோகன் ராய்.
  • யாருடைய ஆட்சியில் சென்னை, கல்கத்தா மற்றும் மும்பாய் பல்கலைகழகங்கள் நிறுவப்பட்டது?
    விடை: டல்ஹௌசி பிரபு.
  • பிரிட்டிஶ் காலனி ஆதிக்கத்தின் விளைவு?
    விடை: நவீன இயந்திரங்களும் தொழிற்சாலைகளும் அறிமுகம்.
  • குதிராம் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆங்கில அதிகாரி யார்?
    விடை: ரான்ட்.
  • எந்த காங்கிரஸ் மாநாட்டில் கதர் இயக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது?
    விடை: பனாரஸ் மாநாடு.
  • ஆங்கில ஏகாதிபத்தியத்தை முதலில் எதிர்த்த தமிழ்நாட்டைச் சார்ந்தவர்?
    விடை: கட்டபொம்மன்.
  • கட்டபொம்மன் ஆட்சி செய்த பகுதி?
    விடை: பாஞ்சாலங்குறிச்சி.

No comments: