
அ.பாரளுமன்றத்தின் ஒரு அவைச் சார்ந்த உறுப்பினர்கள்.
ஆ.மாநில சட்ட சபைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்.
ஜனாதிபதி கீழ்க் கண்டோரை நியமிக்கிறார்:-
அ.பிரதமரு மத்திய அரசின் இதர மந்திரிகளும்.
ஆ. மத்திய அரசின் வழக்கறிஞர்
இ.மத்திய அரசின் தலைமை கணக்காயர்.
ஈ.மாநில ஆளுனர்கள்.
உ.உச்ச நீதி மன்ற மற்றும் உயர் நீதி மன்ற நீதிபதிகள்.
இந்திய ஜனாதிபதி கீழ்க் கண்ட மூன்று விதமான காரணங்களல் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தலாம்.
அ.போர் காரணமான நெருக்கடி (ஶரத்து 352)
ஆ.மாநிலங்களின் அரசியல் நெருக்கடி (ஶரத்து 356)
இ.நிதி நெருக்கடி (ஶரத்து 360)
திரு.அப்துல் கலாம் இந்தியவின் தற்போதைய ஜனாதிபதி ஆவார்.
இந்திய பாரளுமன்றத்தின் இரு அவைகளைச் சார்ந்த உறுப்பினர்களாலும் உதவி ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப் படுகிறார். இவர் மக்கள் தொகை அடிப்படையில் விகிதாச்சார முறைப்படி ஒறறை வாக்கு மூலம் 5 ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார். ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிட தகுதி வாய்ந்த 35 வயதைச் கடந்த இந்திய பிரஜைகள் உதவி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதி வய்ந்தவர்களாகும். திரு ஶெகாவத் தற்போதைய உதவி ஜனாதிபதி ஆவார்.
பிரதமரும் மற்ற மந்திரிகளும் ஜனாதிபதிக்கு ஆலோசனைகள் கூறி இந்திய அரசு செயல்பட உதவுகின்றனர். பிரதமரை ஜனாதிபதியே நியமிக்குறார். இது அமைச்சர்களை பிரதமரின் ஆலோசனையின் பேரில் ஜமாதிபதி நியமிக்கிறார்.
பாராளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களும் அமைச்சர்களாக நியமிக்கப் படலாம். உறுப்பினர்களாக இல்லாதவர்கள் அமைச்சர்களாகவோ பிரதமராகவோ நியமிக்கப்பட்டால் 6 மாதங்களுக்குள் இரு அவைகளில் ஏதேனும் ஒன்றில் உறுப்பினராக வேண்டும். பிரதமருக்கு தமது மந்திரி சபையை மாற்றி அமைக்க உரிமை உண்டு.மூன்று விதமான் அமைச்சர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
அ. முழு அதிகாரம் கொண்ட காபினெட் அமைச்சர்கள்.
ஆ. இராஜாங்க அமைச்சர்கள்.
இ. துணை அமைச்சர்கள்.
No comments:
Post a Comment