நாட்டை ஆட்சி செய்கின்ற பெயரில் நாட்டையே சுடுகாடாக மாற்றும் காட்டு ஓநாய்கள் கூட்டம் இன்றும் அரசியல் என்ற பெயரில் மக்களை சகதியில் தள்ளும் அரசியல் சதிக்காரர்களாக நடமாடுகின்றனர். என்றுதான் தணியும் இந்த அரசியல் தாகம்.இந்த கொள்ளை கூட்டத்தின் பிடியில் சிக்கித் தவிக்கின்றது இன்றைய தமிழகம்.இந்த கயவர்கள் பெரும்பாலும் மக்களை கவருவதற்கு சலுகைகள் என்ற ஆயுதம் எடுத்து மக்களை பலியிட துணிகின்றனர் இந்ததுணிச்சலை யார்? அவர்களுக்கு அளித்தது. யாரும் இல்லை மக்களாகிய நாம்தான் தேர்தல் சமயம் மக்கள்ளாகி நாம் இருக்கின்ற கட்சிகளை எவ்வாறு மதிப்பிட்டு வாக்களித்தேம். வாக்களித்த கட்சி ஆட்சிக்கு வந்தால் என்நாட்டிற்க்கு என்ன நன்மை தரும் என் வீட்டிற்கு என்ன நன்மை தரும் என்று சிந்திக்காமல் வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டு அளித்து அப்படிப்பட்ட கயவர்களை இத்தனை காலம் சுகந்திரமாக இந்நாட்டில் உலாவ விட்டது போதும். இனியும் மக்களாகி நாம் சிந்தித்து வாக்களிக்காவிட்டால் பணம் ஆசை கொண்ட இந்த பூதங்களிடம் இருந்து வருங்கால இந்தியாவை காக்க யார் முன்வருவார்கள்.சிந்தனை என்பது இறைவன் தந்த வரம். ஆனால் தேர்தல் நோரங்களில் மக்களை சிந்திக்க விடாமல் பல சலுகைகளை வழங்குகிறேம் என்று மக்கள் சிந்தனைகளை சிதறடிகச்செய்யும் கயவர்களை துரத்தியடித்து நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடும் நல் உள்ளம் படைத்த தலைவர்களை தேர்ந்து எடுத்து அவர்களை வெற்றி மேடையில் அமர்த்துவது மக்கள்ளாகி நமது கடமை.
No comments:
Post a Comment