
இந்திய அரசியலமைப்பின் ஶரத்து(SHARATTHU) 256 மாநில அரசுகள் பாராளுமன்றம் இயற்றிய சட்டங்களுக்கு உட்பட்டு அரசு அதிகாரங்களை செயல்படித்த வேண்டும். மேலும் மத்திய அரசு மாநிலங்களுக்கு அரசு கொள்கையின் வழிகாட்டு விதிகளை வெளியிடவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஶரத்து(SHARATTHU) 262 மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் மற்றும் பள்ளதாக்குகள் தொடர்பான சட்டங்களைக் கூறுகிறது.
இந்த ஶரத்தின்(SHARATTHU) கீழ் பாராளுமன்றன் இரு மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பங்கீடு போன்ற தாவாக்களை தீர்க்கலாம். மேலும் ஜனாதிபதி தேவைப் பட்டால் இரு மாநிலங்களுக்கு இடையிலான குழுவை அமைக்கலாம்.
அரசியல்லமைப்பின் படி ஒரு நிதிக் குழு(FINANCE COMMISION) உருவாக்கப்பட்டுள்ளது. அது சில இனங்களிலிருந்து கிடைக்கும் வருவாயை மாநிலங்களுக்கிடையே பகிர்ந்தளிக்க உதவுகிறது. வரவினங்கள் இரு விதத்தில் ஒதுக்கப்படுகின்றன. அவையாவன் அ.மத்திய மற்றும் மாநில அரசுகளிடையேயான ஒதுக்கீடு. ஆ.மானியம் மற்றும் மாநில உதவியாக மாநிலங்களுக்கான ஒதுக்கீடு.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரவினங்கள் பற்றி நீண்ட பட்டியல் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. நிதிக் குழு தலைவர் மற்றும் இதர உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அமைப்பு ஆகும்.
No comments:
Post a Comment