Friday, September 28, 2007

உன்னிடன் பழக

உன்னிடன் பழக
ஆரம்பித்திடாத போது வந்த
உன் பிறந்தநாளிற் கெல்லாம்
பரிசாக கணக்கு வைத்து
இருபத்தியி ரெண்டு முத்தம்
எனக்கு மட்டும் பத்தொன்பதுதானா.....


இராஜி

Wednesday, September 26, 2007

பொறுக்கி எடுத்து பொருத்த முடியாமல்

பொறுக்கி எடுத்து பொருத்த
முடியாமல் கிடக்கிறது
என் பாசத்திற்கு உன்
வெகுமானம் அவமானம் என்றால்
தாராளமாக தாங்கிக் கொள்கிறேன்
உன் மீது நான் கொண்ட
பாசத்திற்காக வாதாடுவது
அது உனக்கு விளையாட்டு
அது எனக்கு வலி அதற்காக
நான் உன்னோடு வழக்காட வரவில்லை.
உன்னால் மௌனித்து போன
மனசு மரணித்து கிடக்கிறது.
இனியும் சொல்ல ஏதும் இல்லை அண்ணா
மௌனத்தை தவிர இனியும் என்ன
இருக்கிறது நமக்கிடையில்???????

தீபா

Tuesday, September 11, 2007

உனக்காய்

உனக்காய் ஒரு கவிதை எழுத சொன்னாய்
யோசித்து யோசித்து கடைசியில்
உன் பெயர் எழுதித் தந்தேன்
பக்கம் பக்கமாய் உனக்காய் எழுதிய
கவிதைகளை படித்துவிட்டு
"யார நெனச்சு எழுதுன" என்று
கேட்கும் உன்னிடம் வேறு எதை
எழுதித் தருவது.....

இராஜவேல்

Friday, September 07, 2007

உன்னால்

வார்த்தைகள் கூட
இதயத்தை உடைக்கும் என்று
அறிந்துகொண்டேன்.........

white star

விதியின் வெற்றி...!

விலகி விலகிப் போனாலும்
விடுவதில்லை விதி..
எங்கோ இருந்த என்னையும்...
எங்கேயோ இருந்த உன்னையும்..
சேர்த்து வைத்து
வேண்டாம் என்றிருந்த
காதலையும் வேதமாய் மாற்றி வைத்து
பசி பறித்து....
உறக்கம் கலைத்து....
சிந்தை எங்கும் உன் நினைவு
பரப்பி
உன் மேல் பைத்தியமாய்
எனை மாற்றி விட்டு..
இன்று பார்த்துச் சிரிக்கிறது
"பார்த்தாயா வென்றுவிட்டேன்
நான்" என்று!!!!!!!!!!!!!!!!!!!
white star

Wednesday, September 05, 2007

உனக்காக

உனக்காக என்
வாழ்வின் இறுதி வரை
காத்திருக்கத் தயார்...
நீ வரமாட்டாய் என்று
நன்கு தெரிந்த
பிறகும்...
உனக்காக என்வாழ்வின் இறுதிவரை
காத்திருக்கத் தயார்....
white star

Tuesday, September 04, 2007

உயிர்

உருகுதே உயிர் உருகுதே
எனைத் திரும்பிப்
பார்க்கக் கூடாதா...
ஒரு தரம் விழி ஒரு தரம்
எனை விருப்பிப்
பார்க்கக் கூடாதா....
white star

Monday, September 03, 2007

இனியவனே

இனி நீயும் ஒரு இனிமையென
என் வாழ்வில் இணைந்தாய்
கண்களின் இமையோரங்களில்
கனவுகள் மீண்டும் ஒளிர
நீ மட்டுமே என் வாழ்வென
நீங்கிடாத பந்தமாய் தொடர
என்றும் வாழ்த்தும் அலை ஒசையே.

Friday, August 31, 2007

இரண்டில் ஒன்று சொல்லிவிடு

என்மனம் அவிழ்த்துகொட்டுகிறேன்
மூடிய உன் இதயத்தின் மீது
உன் மீது எனக்கிருக்கும் காதல்
என்மீது எனக்கில்லாமல் போனது
உன் விழிப்புன்னகையும்
இதழ் முறைப்பும்
எனக்கு விளங்கவில்லை
உன் இதயக்கல்லில்
தீட்டிய வார்தைகள் உனக்கு ஆயுதம்
என் மனம் எரிக்கும்
மௌனம் எனக்கு ஆயுதம்
என்னுள் கொதிக்கு
ம்உன்னை எப்படி தணிக்கபோகிறேன்
என் வலிகளுக்கு
நீ தரும் காயங்கள் ஆணியப்போகிறேன்
காதல் சொல்ல தவறினாலும்
என் கண்ணீர் உறிஞ்சத்தவறுவதில்லை நீ
இரண்டில் ஒன்று சொல்லிவிடு
என் காதலை ஏற்றுக்கொள் அல்லது
என் காதலை ஏற்றுக்கொள்

Wednesday, August 22, 2007

அனுமதி

கண்களின் அனுமதி கேட்டா
நான் உன்னைப் பார்த்தேன்??
இதயத்தின் அனுமதி கேட்டா
நீ உள்ளே வந்தாய்??
நம் இருவரின் அனுமதி கேட்டா
காதல் நம்முள் வந்தது?
இப்பொது யார் அனுமதி கேட்டு
என்னை நீ பிரிந்தய்?

white star

Tuesday, August 21, 2007

கவலைவிடு ஆன்ட்டி

என்றேனும் உன்வீட்டிற்கு
வருவேன் நான்
உன் குழந்தைகளிடம்
என்னை சொல்லி
அறி முகப்படுத்துடுவாய்
சித்தியா?அத்தையா?
கான்வென்ட் குழந்தைகளா
கவலைவிடு ஆன்ட்டிஎன்றழைக்கட்டும்....

இராஜி

Sunday, August 19, 2007

கடலில்

கடலில்
சேர்ந்த நீர்
மீண்டும்
நதியாகுமா...
உன்னில்
கலந்த
என்மனம்
திரும்பிவருமா...
white star

Thursday, August 16, 2007

காதலிக்கவில்லை

நீ எவ்வளவு தான்
சென்னாலும்
என்க்குப் புரியவே
இல்லை
நீ என்னைக்
காதலிக்கவில்லை என்று........
white star

Thursday, August 09, 2007

ஆறு வருட காதலும் ஆறுவரி கவிதையும்

பெண்ணே!
ஆறு வருடங்களுக்கு முன்பு...
உன்னை பார்த்த போது...
இழந்தேன் என் மனதை.

அதன் பின்...
இரவுகளில்...
இழந்தேன் என் தூக்கம்.

உன்னைப்பற்றி மட்டும்...
சிந்தித்தாதில்..
.இழந்தேன் என் கல்வி.

என்னிடம் முதன் முதல் நீ...
பேசிய போது...
இழந்தேன் என் மொழி.

நீ, இன்னொருவனை...
கல்யாணம் கட்டிய போது...
இழந்தேன் என் காதல்.

நீயும் என்னை...
காதலித்த போது...
இழந்தேன் என் துக்கம்.

இப்படி, உன்னாலே நான்..
இழந்தது பல பல..
இவை அதிலே ஒரு சில.

அன்பே!
என் கடைசி பரிசாக..
இந்த ஆறு வரிக் கவிதையை...
உனக்குத் தந்துவிட்டு...
இழந்திடவா என் உயிரை?

தெரியாமல் போனதே!

உயிரே உன்க்காக!
உறங்காத இரவுகள் எத்தனையோ?
நிம்மதி இல்லாது!
நினைவற்ற ஜடமாய்!
நான் வாழ்ந்த நாட்கள் எத்னையோ?

அலைகடல் போல்!
ஆசை அலைகளை என்!
மனதில் சுமந்த!
வேதனைகள் தான் எத்தனையோ?

உன் பருவ அழகை!
உள்ளம் கண்டு என்!
இதயம் வாடிய!
நாட்கள் தான் எத்தனையோ?

உன்னை காணும் பாக்கியம் இல்லாத!
துயரத்தில் கண்கள்!
கண்ணீர் சிந்தும்!
நாட்கள்தான் எத்தனையோ?

ம மாற்றம் ஏன்?
உன்னிடம் ஏற்பட்டது!
காரணம் அறிய முயன்ற எனக்கு!
ஏற்பட்ட தோல்விகள் தான் எத்தனையோ!

கற்பனை யுகத்தில் உன்னை!
கனவுக் கன்னியாக!
நெஞ்சில் வரைந்து!
எங்கிய நாட்கள் தான் எத்தனையோ?

கவியரசு_பி

Tuesday, August 07, 2007

என்னவனே.........

என் இதயம் உன்னைச் சேர்ந்ததால்
என் ஆத்மம் உன்னையே தொடர்வதால்
நீயே சொல்லிவிடு
எது வரை நீளப்போகின்றது
உன் மெளனம்........?
அதுவரை காத்திருக்குமா
என் மரணம்..............?

ஜனனி

உன்னுடன்

உன்னுடன்
கைகோர்த்து
நடந்தபோது கூட
நான்
சலனப்பட்டதில்லை
நீ பிரிந்தபோதுதான்
லேசாய்.....

இராஜி

Monday, August 06, 2007

பாதரசம்

பாதரசம் என்பது
எதிலுமே ஒட்டாது!!!!
நீயும் பாதரசமாகிறாய்
என் விஸயத்தில்
மட்டும்!!!!

white star

ரோஜாக்கள்

உனக்காக நான்
வாங்கிய ரோஜாக்கள்
அனைத்தும் இரங்கல்
கூட்டம்
போடுகின்றன...

White star

Sunday, August 05, 2007

தாஜ்மஹால்

எனக்காக தாஜ்மஹால்
கட்டுவேன் என்றாய் நீ...
உனது தாஜ்மஹாலில்
எனது காதலை
நீ புதைத்த போது
புரிந்து கொண்டேன்
தாஜ்மஹால்
ஒரு பெண்ணின்
சமாதி என்பதை...

white star

Saturday, August 04, 2007

தைரியமிருந்தால்

தைரியமிருந்தால்
உன் மனைவிடம் சொல்
என் புகைப்படம் காட்டி
"உன்னைப்போல் இவளும்
என்னிடம் அன்பு
காட்டியிருக்கிறாள்"

இராஜி

Friday, August 03, 2007

தண்டனை

என் இதயத்தைத்
திருடியது நீ...
அதற்காக தனிமைச்
சிறையில்
தண்டனை பெறுவது
நானா....?

white star

சுகமானது.........

பேசாதே அன்பே...
உன் வார்த்தைகளை
விட
உன் மெளனங்கள்
சுகமானது.....

white star

முதன் முதலாய்......!

என் உயிரினுள் முதன்
முதலாய்
நூழைந்தவன் நீ!
என் இதயத்தினுள் முதன்
முதலாய்
நிறைந்தவன் நீ!
என் மன்தில் முதன்
முதலாய்
படர்ந்தவன் நீ!
என்னை விட்டு முதன்
முதலாய்
பிரிபவனும் நீ!
white star

காதல் சிரிப்பு

அன்று நீ..
இருந்த போது
என் சிரிப்பை மிகவும்
ரசிப்பாய்........

இன்று நீ
சென்று விட்டாய்
நீ ரசித்த சிப்பையும்
எடுத்து கொண்டு.....

அழகு

நான் அழகாய்த்
தெரிவதால் நீ என்னைக்
காதலிக்கிறாயா?
இல்லை
நீ என்னைக் காதலிப்பதால்
நான் அழகாய்த்
தெரிகிறேனா?
white star

Thursday, August 02, 2007

கண்ணீர்

வானத்தின் கண்ணீர்
பூமிக்கு மழையானது.....
பூமியின் கண்ணீர்
புற்களில் பனித்துளியானது.....
எனது கண்ணீர்
உனக்கான கவிதை ஆனது......

white star

எங்கே சென்றாய்...

நீ தந்த முத்தத்தின்
ஈரம் கூட காயவில்லை
அதற்குள் எங்கே
சென்றாய்
என்னை விட்டு...

White star

Wednesday, August 01, 2007

நீ.....!

நீ நான் கீறிய
நீர்ச் சித்திரம்
அல்ல...
என் உயிருக்குள்
செதுக்கிய
உயிர்ச் சிற்பம்...

நன்றி
காதல்.காம்

அடியே....

அடியே....
உன்னை நிலவென்று
வர்ணித்து வர்ணித்தே
தேய்ந்து போனேன்
நான்....

Tuesday, July 31, 2007

காதல் ஒரு கெஞ்சல்

கண்ணுக்குக் கனவு வேண்டாமா
கனவுக்குச் சிறகு வேண்டாமா
சிறகுக்குக் கவிதை வேண்டாமா
கவிதைக்கு நான் வேண்டாமா
அன்பே-நீ எனக்கு வேண்டாமா

நிலவுக்கு முகம் வேண்டாமா
முகத்துக்கு இதழ் வேண்டாமா
இதழுக்கு முத்தம் வேண்டாமா
முத்தத்துக்கு நான் வேண்டாமா
அன்பே-நீ எனக்கு வேண்டாமா

உயிருக்கு இளமை வேண்டாமா
இளமைக்கு சுகம் வேண்டாமா
சுகத்துக்கு அணைப்பு வேண்டாமா
அணைப்புக்கு நான் வேண்டாமா
அன்பே-நீ எனக்கு வேண்டாமா

ரசனைக்கு உணர்வு வேண்டாமா
உணர்வுக்கு உள்ளம் வேண்டாமா
உள்ளத்துக்கு காதல் வேண்டாமா
காதலுக்கு நான் வேண்டாமா
அன்பே-நீ எனக்கு வேண்டாமா

Monday, July 30, 2007

நட்பு I

எனக்குக் கொஞ்சம்
கற்றுக் கொடுங்கள்
வாழ்க்கைச் சதுரங்கத்தின்
காய்களை நகர்த்துவதற்கு
எதிரிக்கு எதிரிஎனக்கு
நண்பனென்று
விதியாகிப் போனதன்
விஞ்ஞான விளக்கத்தை
முரண்பாடுகள் தோன்றின்
முறிந்துபோகும் நட்பின்
சமன்பாடுகள் பற்றி
சரியான விளக்கத்தை

நேத்திரங்களின் வீச்சில்
நெகிழ்ந்துபோகும் அன்பின்
சூத்திரத்தை உணர்ந்துகொண்டு
சுகலயத்தில் திளைக்கின்ற
மாத்திரத்தில் எல்லாமே
மாறிப்போய் வெறுப்பாகி
ஆத்திரத்தைப் பிரசவிக்கும்
அதிசயத்தின் அர்த்தத்தை.

வரவேற்க

வசந்த காற்றை வாகனமாய் கொண்டு
உலக வீதிகளில் உலாவந்து
உங்கள் வீட்டு கதவுகளை தட்டி
புத்துணர்வையும்
உற்சாகத்தையும்
தந்துவிட்டு
பிறக்கபோகின்றது புத்தாண்டு
இதோ அதற்கான என் பூச்செண்டு.


-நன்றி விழியன்

Thursday, July 26, 2007

கட்டபொம்மன் வசனத்ததை இப்போதுள்ள கணிணி மாணவர்கள் பேசினால் எப்படி இருக்கும் - என்று ஒரு சிறிய கற்பனை.

ராம், மதர் போர்டு, கீ போர்டு,
யாரிடம் கேட்கிறாய்! PASS WORD
எம் குல கணிணி பெண்களுக்கு
கணிணி சரி செய்து கொடுத்தாயா!
அல்லது கணிணியை கண்டு பிடித்த
சார்லஸ்-க்கு காப்பி செய்து கொடுத்தாயா!
நீ என்ன விண்டோஸ் XP-யா 2000 -னா!
யாரிடம் கேட்கிறாய் PASS WORD.

மரணம்

எங்கெல்லாமோ
அலைந்து
திரிந்து
ஒன்றுக்கும் உதவாத மாமன்
அழைத்து வந்தான்
கிழவியின் சாவுக்கு
வாசிக்க - அதற்கான
மேளக்காரர்களை.

தானும் அவர்களுடன்
சாராயம் அருந்தி வந்து
மிக மிக சம்பிரதாயமாய்
அழுதான்.

இது எல்லாமே
அவனும் இறந்த நாளில்
நடந்தது.

நன்றி - கலாப்ரியா

வைரஸ் இருந்ததால் திரும்பி விட்டேன்

பராசக்தி வசனத்தை இப்பொழுது கம்ப்யூட்டர் மாணவர்கள்
பேசினால் எப்படியிருக்கும்.
ஒரு வித்தியாசமான கற்பனை. நான் ஏசி அறையில்
படித்தாலும், ஓசிக்கு சாப்ட்வேர் வாங்கியிருக்கிறேன்.
விண்டோஸ் படிப்பதற்காக வீட்டை விற்றிருக்கிறேன். எனக்கு
Linked list புரியவில்லை, ஆனால் என் பணத்தோடு மட்டும் லிங்க்
செய்த listஐ சொல்கிறேன். இரவெல்லாம் படித்தாலும்
யுனிக்ஸ புரியவில்லை, ஆனால் டக்கென்று புரிந்துகொண்டேன்
டாஸையு ம், கம்ப்யூட்டர் பீல்டும் இப்பொழுது டக்(DUCK)
எனப் புரிந்து கொண்டேன்.

கேளுங்கள் என் ஸ்டோரியை எம் எஸ் WORDல் டைப் செய்வதற்கு
முன்.... தயவுசெய்து கெளுங்கள். தமிழ் நாட்டில் இந்த திருநெல்வேலியில் படித்தவன் நான். படிக்க ஒரு ஊரு.......... ப்ராஜக்ட் செய்ய ஒரு ஊரு........ கம்ப்யூட்டர் ஸ்டூடண்ட்டின் தலையெழுத்துக்கு.... நான் மட்டும் விதிவிலக்கா என்ன? ஆம், நெல்லையில் படித்த நான்..... ஐ டி பீல்டு அமுங்கிப் போயிருக்கும் சென்னைக்கு ப்ராஜக்ட் செய்யப் போனேன். சென்னை
என்னை ரீ சைக்கில் பின் போல ஆக்கியது. டாஸ் படிக்க கூட
வழியில்லாத எனக்கு ASP யில் ப்ராஜக்ட் செய்யச் சொன்னான் ஒருவன்! இருக்கும் சைட்டையே ஒழுங்காய்ப் பார்க்க முடியவில்லை, இந்த லட்சனத்தில் வெப்சைட் ப்ராஜக்ட் டாம்! என் பெயரோ ராம், ஆம் ராம்(RAM), GB ஆதிகம் உள்ள பெயர், ஆனால் VB ப்ராஜக்ட் செய்யப் போய்ச் சென்னையில் ஓபி அடித்து திரிந்தேன். நான் நினைத்திருந்தால்.......... என் பாவாவிடம் சொல்லி ஜாவா ப்ராஜக்ட் வாங்கியிருக்கலாம்.

டம்மி ப்ராஜக்ட்டைக்கூட ரியல் ப்ராஜக்ட் என்று ரீல் விட்டிருக்க முடியும். ஆனால் அதைத்தான் விரும்புகிறதா இந்த ஐ டி பீல்டு! லைனக்ஸ் என்று டாசைக் கற்றுத்தந்தான் ஒரு கம்ப்யூட்டர் கடைக்காரன், ஓடினேன்............ VB பழைய பதிப்பை பக்குவமாய் கற்று தந்தான் ஒரு FACULTY, ஓடினேன்............ டம்மி ப்ராஜக்ட் தருவதற்காக சாப்ட்வேர் கம்பனிககாரன் விரட்டினான், ஓடினேன்............ ஆடித் தள்ளுபடியில் CD வாங்கி தந்தான் ஒருவன் ஓடினேன்............ "ப்ராஜக்ட் வாங்கலையொ ப்ராஜக்ட்" கூவி கொன்டிருக்கும் கூட்டம் தாண்டி ஓடினேன்............ வெப்சைட்டில் விரித்து வைதித்ருக்கும் வலையைத் தாண்டி ஓடினேன்............, ஓடினேன்............, ஓடினேன்............ மதர் போர்டை தண்டி மணிக் காணக்காய் ஓடினேன்............ ஜாவா, வீபீ, ஒரக்கில் என்று ஏலம் விடுகின்ற கம்ப்யூட்டர் சென்ட்ர்களை கடந்து ஓடினேன்.......... எத்தனை சென்டரடா அதில் தான் எவ்வளவு தெண்டமடா, ஓடினேன்...........,ஓடினேன்........... இப்பொழுதுள்ள IT பீல்டை போலவே தடுமாறித் தடுமாறி ஓடினேன்........... அங்கே, வைரஸ் இருந்ததால் திரும்பி விட்டேன், பாவம் என் வாழ்கை ஆனது ஒரு கூவம், எனக்கு ஐடியா கொடுதிருக்க வேண்டும், ரியல் ப்ராஜக்ட் தந்திருக்க வேண்டும் இன்று சட்டதை நீட்டுவோர், இன்று IT பீல்டில் இருப்போர். செய்தார்களா ...?

ப்ராஜக்ட் செய்ய விட்டார்களா இந்த ராமை(RAM)? எனக்கு டம்மி ப்ராஜக்ட் தந்தது யார் குற்றமா? செலவு செய்து சென்னை சென்ற என் குற்றமா? இல்லை டம்மிக்கும் ரியலுக்கும் வித்தியாசம் தெரியாத சாப்ட்வேர் கொள்ளையர்களின் குற்றமா? வளர வேண்டிய வெப்சைட்டில் ஆபாசங்கள் காட்டுவது யார் குற்றம்..? பில் கேட்ஸின் குற்றமா? இல்லை பில் போடத்தெரியாதவர்கள் எல்லம் ப்ராஜ்க்ட் செய்கிறார்களே அவர்களின் குற்றமா? ஒரு மொழியையும் ஒழுஙகாய்ப் படிக்காமல் பயோடேட்டாவில் நிரப்புவதற்காக C, C++,ஜாவா, வீபீ,ஒராக்கில், ASP, என்று அடுக்கிகொன்டே செல்வது யார் குற்றம்? அப்பாவி மானவர்களின் குற்றமா?-இல்லை எங்கள் அப்பாவின் பனத்தை அந்நியாயமாய்ப் பிடுங்கிக் கொண்டு "FACTORIAL,FIBONACCI,QUADRATIC EQUATION, PRIME NO, POLYNDROME "இது தான் ப்ரோகிராம் என்று சொன்ன கம்ப்யூட்டர் சென்டர்களின் குற்றமா? இந்த குற்றங்கள் களையப்படும் வரை என்னை போன்ற ராம்கள்(RAM) டம்மி ப்ராஜக்ட்டைதான் ரியல் ப்ராஜக்ட் என்று ரீல் விடுவார்கள்.

Wednesday, July 25, 2007

சொர்க்கம்

சொர்க்கத்தின்
விலாசத்தை போய்
விசாரித்தேன்
அவள் தான்
சொர்க்கம்
என்பதை அறிந்து
கொள்ளாமல்!!!

Sunday, July 22, 2007

இனியவளே

இனியவளே இனி யாரையும்
நிமிர்ந்து பார்க்காதே!
உன்கண்களை பார்த்தே
என்னைக்கண்டு பிடித்து விடுவார்கள்.

Wednesday, July 18, 2007

பராசக்தி வசனம் இன்றைய கம்ப்யூட்டர் மாணவர் மொழியில்

பராசக்தி வசனத்தை இப்பொழுது கம்ப்யூட்டர் மாணவர்கள் பேசினால் எப்படியிருக்கும். ஒரு வித்தியாசமான கற்பனை.

நான் ஏசி அறையில் படித்தாலும், ஓசிக்கு சாப்ட்வேர் வாங்கியிருக்கிறேன். விண்டோஸ் படிப்பதற்காக வீட்டை விற்றிருக்கிறேன்.

எனக்கு Linked list புரியவில்லை, ஆனால் என் பணத்தோடு மட்டும் லிங்க் செய்த listஐ சொல்கிறேன்.

இரவெல்லாம் படித்தாலும் யுனிக்ஸ புரியவில்லை, ஆனால் டக்கென்று புரிந்துகொண்டேன் டாஸையு ம், கம்ப்யூட்டர் பீல்டும் இப்பொழுது டக்(DUCK) எனப் புரிந்து கொண்டேன்.

கேளுங்கள் என் ஸ்டோரியை
எம் எஸ் WORDல் டைப் செய்வதற்கு முன்....
தயவுசெய்து கெளுங்கள்.

தமிழ் நாட்டில் இந்த திருநெல்வேலியில் படித்தவன் நான்.
படிக்க ஒரு ஊரு.......... ப்ராஜக்ட் செய்ய ஒரு ஊரு........
கம்ப்யூட்டர் ஸ்டூடண்ட்டின் தலையெழுத்துக்கு....
நான் மட்டும் விதிவிலக்கா என்ன?

ஆம், நெல்லையில் படித்த நான்.....
ஐ டி பீல்டு அமுங்கிப் போயிருக்கும் சென்னைக்கு ப்ராஜக்ட் செய்யப் போனேன். சென்னை என்னை ரீ சைக்கில் பின் போல ஆக்கியது.
டாஸ் படிக்க கூட வழியில்லாத எனக்கு ASP யில் ப்ராஜக்ட் செய்யச் சொன்னான் ஒருவன்!
இருக்கும் சைட்டையே ஒழுங்காய்ப் பார்க்க முடியவில்லை, இந்த லட்சனத்தில் வெப்சைட் ப்ராஜக்ட் டாம்!

என் பெயரோ ராம், ஆம் ராம்(RAM), GB ஆதிகம் உள்ள பெயர், ஆனால் VB ப்ராஜக்ட் செய்யப் போய்ச் சென்னையில் ஓபி அடித்து திரிந்தேன்.

நான் நினைத்திருந்தால்..........
என் பாவாவிடம் சொல்லி ஜாவா ப்ராஜக்ட் வாங்கியிருக்கலாம்.
டம்மி ப்ராஜக்ட்டைக்கூட ரியல் ப்ராஜக்ட் என்று ரீல் விட்டிருக்க முடியும்.

ஆனால் அதைத்தான் விரும்புகிறதா இந்த ஐ டி பீல்டு!
லைனக்ஸ் என்று டாசைக் கற்றுத்தந்தான் ஒரு
கம்ப்யூட்டர் கடைக்காரன், ஓடினேன்............
VB பழைய பதிப்பை பக்குவமாய் கற்று தந்தான் ஒரு FACULTY, ஓடினேன்............
டம்மி ப்ராஜக்ட் தருவதற்காக சாப்ட்வேர் கம்பனிககாரன் விரட்டினான், ஓடினேன்............
ஆடித் தள்ளுபடியில் CD வாங்கி தந்தான் ஒருவன் ஓடினேன்............
"ப்ராஜக்ட் வாங்கலையொ ப்ராஜக்ட்" கூவி கொன்டிருக்கும் கூட்டம் தாண்டி ஓடினேன்............
வெப்சைட்டில் விரித்து வைதித்ருக்கும் வலையைத் தாண்டி ஓடினேன்............, ஓடினேன்............, ஓடினேன்............
மதர் போர்டை தண்டி மணிக் காணக்காய் ஓடினேன்............
ஜாவா, வீபீ, ஒரக்கில் என்று ஏலம் விடுகின்ற கம்ப்யூட்டர் சென்ட்ர்களை கடந்து ஓடினேன்..........
எத்தனை சென்டரடா அதில் தான் எவ்வளவு தெண்டமடா, ஓடினேன்...........,ஓடினேன்...........
இப்பொழுதுள்ள IT பீல்டை போலவே தடுமாறித் தடுமாறி ஓடினேன்...........
அங்கே, வைரஸ் இருந்ததால் திரும்பி விட்டேன்,
பாவம் என் வாழ்கை ஆனது ஒரு கூவம்,
எனக்கு ஐடியா கொடுதிருக்க வேண்டும்,
ரியல் ப்ராஜக்ட் தந்திருக்க வேண்டும் இன்று சட்டதை நீட்டுவோர், இன்று IT பீல்டில் இருப்போர்.
செய்தார்களா ...?
ப்ராஜக்ட் செய்ய விட்டார்களா இந்த ராமை(RAM)?
எனக்கு டம்மி ப்ராஜக்ட் தந்தது யார் குற்றமா?
செலவு செய்து சென்னை சென்ற என் குற்றமா? இல்லை
டம்மிக்கும் ரியலுக்கும் வித்தியாசம் தெரியாத சாப்ட்வேர் கொள்ளையர்களின் குற்றமா?

வளர வேண்டிய வெப்சைட்டில் ஆபாசங்கள் காட்டுவது யார் குற்றம்..?
பில் கேட்ஸின் குற்றமா? இல்லை பில் போடத்தெரியாதவர்கள் எல்லம் ப்ராஜ்க்ட் செய்கிறார்களே அவர்களின் குற்றமா?
ஒரு மொழியையும் ஒழுஙகாய்ப் படிக்காமல் பயோடேட்டாவில் நிரப்புவதற்காக C, C++,ஜாவா, வீபீ,ஒராக்கில், ASP, என்று அடுக்கிகொன்டே செல்வது யார் குற்றம்?
அப்பாவி மானவர்களின் குற்றமா?-இல்லை எங்கள் அப்பாவின் பனத்தை அந்நியாயமாய்ப் பிடுங்கிக் கொண்டு "FACTORIAL,FIBONACCI,QUADRATIC EQUATION, PRIME NO, POLYNDROME "இது தான் ப்ரோகிராம் என்று சொன்ன கம்ப்யூட்டர் சென்டர்களின் குற்றமா?

இந்த குற்றங்கள் களையப்படும் வரை என்னை போன்ற ராம்கள்(RAM) டம்மி ப்ராஜக்ட்டைதான் ரியல் ப்ராஜக்ட் என்று ரீல் விடுவார்கள்

Tuesday, July 10, 2007

கவிதை வேண்டும்

காலையிலும் மாலையிலும்
கனவிலும் நீ தானடி
உறவிலும் உறக்கத்திலும்
உயிரே நீ தானடி..
காதல் வேண்டுமா? கவிதை வேண்டுமா?
நிச்சயம் சொல்வேன் சத்தியம் செய்வேன்
"கவிதை தான் வேண்டும் எனக்கு" -என்
கவிதை நீ தானடி.

ஒரு வெம்மையான பரிசு

நீ எனக்குப் பரிசளித்த புத்தகம்
மிகவும் வெதுவெதுப்பயிருந்தது -உன்
கலாப மார்பக மேட்டில்
அழுந்தியிருந்து வந்ததால்!

என் கண்களோடு லயித்து உரையாடியபடி
வெகு நேரம்
உன் மார்போடு அணைத்து வைத்திருந்தாய் அதனை...
உன் கைகளும் விரல்களும்
அலைபேசியின் மின்னூட்டிபோல
இயங்கியிருக்கக்கூடும்!

வெகு ஆர்வத்துடன் படிக்கிறேன் அதை
அதன் குளிர்வான வெப்பத்துக்காய்!

அதன் ஒவ்வொரு பக்கத்திலும்
மீண்டெழும் வெம்மை
கருப்பட்டி - சுக்கு - மல்லிக் காபியின்
அழுத்தமான ஆவியாய்
தீவிர மணத்துடன் என் முகத்தில் படர
ஆவியாகி மேலெழுகிறேன் நானும்
நீ அடிக்கடி பறந்து செல்லும்
அதே வான்பாதை வழியே.

நன்றி,
- நட்சத்ரன்

Thursday, February 15, 2007

அன்பே ஆருயிரே!

உன்னை நினைத்து-என்
துள்ளாத மனமும் துள்ளும்
நான் உடைக்காத தேங்காய்-உன்னை
திங்கவைப்பேன் மாங்காய்
நான் அடிப்பேன் சாயா- உங்கையாவப்
பாத்து சொல்லு போயா
நான் தின்பேன் பரோட்டா-என்னைப்
பாத்து காட்டாதே டாட்டா
கடைக்காரன் எனக்கு போட்டான் புள்சே-நீ
எனக்கு காட்டாத ஜல்சா
இப்படிக்கு
மங்கையர் மனங்கவர்ந்த
நாயகன் சுனீஸ்

Thursday, February 08, 2007

குட்டிஸ் பாடல்ள்

இறைவன்
இறைவா! உன்னை வணங்கிடு வேன்
இன்றும் என்றும் போற்றிடுவேன்
அம்மா அப்பா நலம் காக்க
அன்பாய் உன்னை வேண்டிடுவேன்
நலமும் புகழும் நான் பெறவே
நளும் உன்னை பணிந்திடுவேன்.

Monday, February 05, 2007

கவிதை

எனக்கு தெரியும்
நீ விரும்புவது என்னையல்ல.........
என் கவிதைகளைத் தான் என்று...............
ஆனால் உனக்கு தெரியுமா
உன்னை விரும்புவது
என் கவிதைகளல்ல
நான் தான் என்று!!!!

Saturday, February 03, 2007

இணைய தளத்திற்கான குறுக்குவழி உருவாக்கும் வழிகள்.


நீங்கள் அடிக்கடி காணவிரும்பும் இணைய தளத்திற்கு ஒரு ஶார்ட்
கட் இருந்தால் மிகவும் வசதியாக இருக்கும் அல்லவா? அதனைல்
கிளிக் செய்தால் இணைய இணைப்பில் நேராக அந்த தளத்திற்குச்
செல்லலாம் அல்லவா? ஆம் அதற்கும் ஒரு ஶார்ட் கட் அமைத்திட
முடியும். இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் இணைய தள முகவரி
அமைத்திடும் இடத்தை அடுத்து நீலக் கலரில் ஒரு சிறிய கட்டம்
என்ற எழுத்துடன் இருப்பதனைப் பார்க்கலாம். நீங்கள் விரும்பும்
இணையதளத்தைப் பார்த்துக் கொண்டிருக்கையில் பிரவுசரின்
விண்டோவைச் சிறிதாக்கவும். வலது மேல் மூலையில் உள்ள
மூன்று கட்டங்களில் நடுவில் இருக்கும் கட்டத்தில் கிளிக் செய்தால்
சிறியதாகிவிடும். இப்போது பிரவுசர் விண்டோவும் மானிட்டர்
திரையும் தெரியும் அல்லவா? இனி அந்தக் கட்டத்தில் மவுஸை
வைத்து இடது பட்டனை அழுத்தியவாறே இழுத்து வந்து
மானிட்டரின் டெஸ்க்டாப் திரைப் பகுதியில் விட்டுவிடவும்.
கிடைக்கும் ஐகான்தான் ஷார்ட் கட் வழுயாகும். இனி இதனை
ழுத்தினால் நீங்கள் பார்த்துக் கொண்டிருந்த தள்த்திற்கு அழைத்துச்
செல்லப்படுவீர்கள்.

நெட்ஸ்கேப் பயன்படுத்துபவர்கள் இதே போல இணைய தளம்
முகவரியை அடுத்து உள்ள சிறிய ஐகானை இழுத்து வந்து
திரைப்பகுதியில் விடவும். இண்டர்நெட் இணைப்பில் இருக்கையில்
இந்த ஷார்ட்கட்களை கிளிக் செய்தால் அது உங்களின் பிரவுசரைத்
திறந்து அந்த தளத்திற்கு உங்களைக் கொண்டு செல்லும்.

Saturday, January 27, 2007

காதல்

காதல் காட்டில்,
மட்டும்,
மான்கள்,
வலைவிரிக்க,
வேடர்கள்,
அகப்பட்டுக் கொள்ளுகின்றனர்.

எனது பெயர்

உன்னுடைய உதடுகள்
உச்சரிக்கும் வரை
நான் உணர்ந்ததில்லை
என்னுடைய பெயர்
இத்தனை அழகாய்
இருக்கிறது என்று!!

Thursday, January 25, 2007

நினைவுகள்

எனது இதய நதியின்
ஓடமாய்
உன் நினைவுகள்
என்றும்
ஓடிக்கொண்டே இருக்கும் !!!

Tuesday, January 23, 2007

ரசிச்சு............ரசிச்சு...

நான் ரசித்த நகைசுவை பகுதி.


1."டாக்டர் எனக்கு ஞாபக மறதி அதிகமா இருக்கு!"

"எவ்வளவு நாளா இந்தத் தொல்லை?"

"எந்தத் தொல்லை டாக்டர்?"

Monday, January 22, 2007

நாளைய நண்பன்.

கண்டமுதல் நிமிடம்
கனகாலம் பிரிந்தவர்போல்
எண்ணவைக்கும் நட்பில்
ஏற்படுமோர் சந்தோசம்
பாதங்களுக் கிதமான
பழையதொரு சப்பாத்தின்
ஆதரவைப்போல் மனத்தை
ஆட்படுத்தும் அன்பதனை
காரியமாகும்
கடைசிக் கணம்வரையில்
வீரியமொழுகாதிருக்கும்
விந்தைச் சினேகிதத்தை
சுயலாபத் துணில்
முதுகு சொறிந்துகொள்ளும்
நியமத்தில் வாழும்
நிழல் வளைந்த மனிதர்களை
தோழமை என்னும்
தொல்லைகளே இல்லாத
நாளைய நண்பனை
இனங்க்கண்டு கொள்வதை
எனக்குக் கொஞ்சம்
கற்றுக் கொடுங்கள்.

Wednesday, January 10, 2007

இணைய தளங்களின் மூலமாக நீங்களும் சம்பாதிக்கலாம்

இணைய தளங்களின் மூலமாக நீங்களும் சம்பாதிக்கலாம் பின் வரும் இணைய தளங்களை பார்வை இடுங்கள்

http://amie.50webs.org/jobs.htm

Tuesday, January 09, 2007

உறவு

சுற்றமும் சூழலும்
படைத்து விட்ட உறவுகளை
காட்டிலும் உள்ளமும்
உணர்வுகளும் புரிந்து கொண்ட
உறவே மேலானது!!!

Monday, January 08, 2007

நண்பர்களுக்கு இலவச E-Greetings அனுப்ப

கேள்வி: நண்பர்களுக்கு இலவச E-Greetings அனுப்ப வெப் தளங்களில்
நுழைய வேண்டியுள்ளது. அவற்றை தயாரித்து இ-மெயிலுடன்
அனுப்ப வழி உள்ளதா?

பதில்: Free cards 2.0 என்ற 0.6 எம்பி அளவு கொண்ட புரோகிராமை
இன்டர்நெட்டில் இருந்து டவுன்லோடு செய்து உங்கள் கம்ப்யூட்டரில்
நிறுவிக் கொள்ளுக்கள். இதை வைத்து Electronic Greetings தயாரிக்கலாம்.
அந்த கார்டில் டெக்ஸ்ட், படம்(BMP) ஆடியோ (WAV) இசை(MID)
வீடியோ(AVI) போன்ற வற்றை நுழைக்கலாம்.
நீங்கள் தயாரித்த கார்டை EXE ஃபைலாக மாற்றி நண்பர்களுக்கு
ஃபிளாப்பி அல்லது இ-மெயில் மூலமாக அனுப்பி வையுங்கள்.
அவர்கள் அந்த EXE ஃபைலை இயக்கியவுடன், உங்கள் வாழ்த்து
அவருக்கு கிடைக்கும்.