Wednesday, April 26, 2006

சென்னையில் தன்னாட்சி இயக்கத்தை தொடங்கியவர்

  • அலிகார் முஸ்லிம் பல்கலைகழகத்தை நிறுவியவர்?
    விடை: சர்.செய்யது அஹமது கான்.
  • பனாரஸ் இந்துப் பல்கலைகழகத்தை நிறுவியவர்?
    விடை: மதன் மோகன் மாளவியா.
  • சென்னையில் தன்னாட்சி இயக்கத்தை தொடங்கியவர்?
    விடை: அன்னிபெசன்ட்.
  • ஆங்கில ஆட்சியில் எந்த கடைசி இந்தியன் மீது பொய் வழக்கு போட்டு நீதிமன்றம் குற்றவாளியென தீர்ப்பளித்தது?
    விடை: மகராஜ நந்தகுமார்.
  • பிரம்ம சமாஜத்தை நிறுவியவர்?
    விடை: ராஜாராம் மோகம்ராய்.
  • ராஜாராம் மோகம்ராயின் வாரிசு?
    விடை: தேவேந்திரநாத் தாகூர்.
  • இந்தியாவில் சட்டத்தின் மூலம் "சதி" என்ற உடன்கட்டை ஏறுதலை ஒழித்தவர்?
    விடை: வில்லியம் பென்டிங் பிரபு.
  • பிரார்த்தனா சமாஜத்தை நிறுவ காரணமாயிருந்தவர்?
    விடை: ஆத்ம ராம் பாண்டுரங்கன்.
  • 476. தமிழ் பகத்சிங் என் அழைக்கப்பட்டவர்?
    விடை: வாஞ்சிநாதன்.
  • இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முதன் முறையாக சிறைக்கு சென்ற ஆங்கிலேயர்?
    விடை: அன்னிபெசன்ட்.

Friday, April 21, 2006

ஆசை மொழி

பட்சிகளைப் பிடிப்பதற்கு ஆசைமொழி பேசி அவைகளை அருகே அழைக்க முயலுவது போல என்னிடம் என் நாண்பர்கள் என்று சொல்லிக் கொண்டு என்னை முகஸ்துதி செய்கிறர்கள் ஆனல் உள்ளூர அவர்கள் என்மீது கொண்டுள்ள துவேஶம் எனக்கு நன்றகப் புலப்படுகிறது. இத்தகையவர்கள் என்னை நேர்முகமாகவே ஏசி என்னைத் தூஶித்தாலும் நானும் அவர்களை எவ்வளவோ பாராட்டுவேன்- அவர்களுக்காக இரக்கமும் பட்டிருப்பேன்.

கசப்பும்-காதலும், அவைகளை ஆமோதிப்பவர்களின் மனதில் சந்தேகத்தையூட்டும்.

Thursday, April 13, 2006

அன்பு அன்பு

அன்பு அன்பு
என்று நாம்
எடுத்து வந்த அடிதான்
பிழைச்சாச்சு
சொந்தமென்றும் பந்தமென்றும்
சேர்ந்திருந்தோம்
நாட்டினிலே
ராணுவம் தந்த தொல்லையினால்
நாடுவிட்டு நாடு வந்தோம்
நாமமமைதி தானிழந்தோம்!
-அனுசுயா

Wednesday, April 12, 2006

காங்கிரஸ் கட்சியில் கராத்தே தியாகராஜன்

சென்னையில் தி.மு.க தலைவர் மு.கருணாநிதியை, தமிழ்க காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிருஶ்ணசாமி நேற்று சந்தித்து பேசினார்.
சட்டசபை தேர்தலில் தி.மு.கவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் கராத்தே
தியாகராஜன் இன்று சேருவதாக தகவல் வெளியானது.

Monday, April 10, 2006

பொது அறிவு 1

  • இந்தியாவில் அஞ்சல் முறையை அறிமுகப்படுத்தியவர்?
    விடை: ராபர்ட் கிளைவ்.
  • விதவைகள் மறுமணத்திற்கு ஆதரவளித்த இந்தியர்?
    விடை: ராஜாராம் மோகன்ராய்.
  • சிட்டகாங் ஆயுதகிடங்கு சோதனையுடன் தொடர்புடையவர்?
    விடை: சூர்ய சென்
  • பிரம்ம ஞானசபையை நிறுவியவர்?
    விடை: மேடம் பிளவட்ஸ்கி மற்றும் கர்னல் ஆல்காட்.
  • கி.பி.1838-ல் தொடங்கப்பட்ட முதல் அரசியல் கழகம்?
    விடை: குடியேறியவர் கழகம்.
  • நவீன இந்தியாவில் முதலில் நிறுவப்பட்ட பொது சங்கம்?
    விடை: நில உடைமையாளர் சங்கம்.
  • இந்தியாவில் முதல் பல்கலைக்கழகம் எங்கு நிறுவப்பட்டது?
    விடை: கல்லத்தா
  • இந்தியப் பணியாளர் சங்கத்தை நிறுவியவர்?
    விடை: கோகலே.
  • தாய்நாட்டுப் பத்திரிகைச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
    விடை: கி.பி.1878.
  • இந்தியச் சங்கத்தை நிறுவியவர்?
    விடை: சுரேந்திரநாத் பானர்ஜி.

Sunday, April 09, 2006

முகமதிய ஆங்கில கீழ்த்திசை கல்லூரி

  • "இயேசு கிறிஸ்துவின் போதனைகள்" நூலை எழுதியவர்?
    விடை: ராஜாராம் மோகன் ராய்.
  • முகமதிய ஆங்கில கீழ்த்திசை கல்லூரியை நிறுவியவர்?
    விடை: சர் சையது அகமதுகான்.
  • தக்காண கல்விக் கழகத்தை ஏற்படுத்தியவர்?
    விடை: எம்.ஜி.ரானடே
  • பிரம்ம ஞான சபையின் எண்ணங்களை அன்னிபெசன்ட் அம்மையார் எந்த பத்திரிகை மூலம் பரவ செய்தார்?
    விடை: நியூ இந்தியா
  • இந்தியாவில் முதல் இருப்புபாதை எந்த இரு நகரங்களுக்கிடையே அமைக்கப்பட்டது?
    விடை: தானே முதல் மும்பாய் வரை
  • இந்தியாவில் ஆங்கில ஆட்சியின் போது தொழிற்சாலைகளின் வளர்ச்சியின்மைக்கு காரணம் ?
    விடை: செல்வந்தர்களின் முதலீட்டுக்கு உள்நாட்டில் முன்னுரிமையின்மை
  • ஆப்கானிஸ்தான் மீது முன்னோக்கிய கொள்கையை கடைபிடித்த ஆங்கில கவர்னர் ஜெனரல் .
    விடை: லிட்டன் பிரபு.
  • பிரிட்டிஶ் இந்தியாவில் உள்ளாட்சி அமைப்புகளை அறிமுகப்படுத்தியவர்?
    விடை: ரிப்பன் பிரபு.
  • டில்லி நகரம் எப்போது நிறுவப்பட்டது?
    விடை: கி.பி. 736.
  • இந்தியாவில் முதல் நூல் எந்த மொழியில் அச்சிடப்பட்டது?
    விடை: ரோமன்.

முக்கிய தினங்கள்.

  • ஜனவரி 12 தேசிய இளைஞர் தினம்
  • ஜனவரி 15 இராணுவ தினம்
  • ஜனவரி 26 குடியரசு தினம், சர்வதேச கஸ்டம்ஸ் தினம்
  • ஜனவரி 28 தேசிய அறிவியல் தினம்
  • மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினம்
  • மார்ச் 15 உலக ஊனமுற்றோர் தினம்
  • மார்ச் 21 உலக வன தினம்
  • ஏப்ரல் 7 உலக ஆரோக்கிய தினம்
  • ஏப்ரல் 22 பூமி தினம்
  • மே 1 தொழிலாளர் தினம்
  • மே 3 பத்திரிகை சுகந்திர தினம்
  • மே(இரண்டாம் ஞாயிறு) தாய் தினம்
  • மே 8 உலக செஞ்சிலுவை தினம்
  • மே 15 சர்வதேச குடும்ப தினம்
  • மே 17 உலக தகவல் தொடர்பு தினம்
    மே 24 காமன் வெல்த் தினம்
  • மே 31 புகையிலை எதிர்ப்பு தினம்
  • ஜுன் 5 உலக சூற்றுச் சூழல் தினம்
  • ஜுன் 20 தந்தையர் தினம்
  • ஜுலை 11 உலக மக்கள் திகை தினம்
  • ஆகஸ்ட் 9 வெள்ளையனே வெளியேறு தினம், நாகசாகி தினம்
  • ஆகஸ்ட் 15 சுதந்திர தினம்
  • ஆகஸ்ட் 29 தேசிய விளையாட்டு தினம்
  • செப்டம்பர் 5 ஆசிரியர் தினம்
  • செப்டம்பர் 8 உலக எழுத்தறிவு தினம்
  • செப்டம்பர் 16 உலக ஒசோன் தினம்
  • செப்டம்பர் 26 காது கேளாதோர் தினம்
  • செப்டம்பர் 27 உலக சுற்றுலா தினம்
  • அக்டோபர் 1 உலக முதியோர் தினம்
  • அக்டோபர் 3 உலக குடியிருப்பு தினம்
  • அக்டோபர் 4 உலக விலங்கு நல தினம்
  • அக்டோபர் 8 இந்திய விமானப் படை தினம்
  • அக்டோபர் 9 உலக தபால் நிலைய தினம்
  • அக்டோபர் 10 தேசிய தபால் நிலைய தினம்
  • அக்டோபர் 14 உலக தர தினம்
  • அக்டோபர் 16 உலக உணவு தினம்
  • அக்டோபர் 24 ஐக்கிய நாடுகள் தினம்
  • நாவம்பர் 14 குழந்தைகள் தினம்
  • டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் தினம்
  • டிசம்பர் 4 கடற்படை தினம்
  • டிசம்பர் 10 மனித உரிமை தினம்
  • டிசம்பர் 23 விவசாயிகள் தினம்

Friday, April 07, 2006

பிரம்ம சமாஜம் [1828]

  • எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
    விடை: கி.பி. 1828
  • ஆரிய சமாஜத்தை நிறுவியவர்
    விடை: தயானந்த சரஸ்வதி
  • தயானந்த சரஸ்வதியின் இயற்பெயர் என்ன?
    விடை: மூலசங்கரர்.
  • இந்துமத்தின் மார்டின் லூதர் என வர்ணிக்கப்படுபவர்?
    விடை: தயானந்த சரஸ்வதி
  • தயானந்த ஆங்கில வேதகல்லூரியை லாகூரில் நிறுவியவர்?
    விடை: லாலா ஹன்ஸ் ராஜ்.
  • பிரம்ம ஞான சபையின் தலைமையிடம் இந்தியாவில் எங்கு அமைந்து உள்ளது?
    விடை: சென்னை.
  • பனாரஸ் நகரில் மத்திய இந்துக் கல்லூரியை நிறுவியவர்?
    விடை: அன்னிபெசன்ட்
  • முகமதிய இலக்கிய கழகத்தை நிறுவியவர்?
    விடை: நவாப் அப்துல் லத்தீப்.
  • அகமதிய இயக்கத்தை நிறுவியவர்?
    விடை: மிர்சா குலாம் அகமது.

இந்தியாவில் சிவில் சர்வீஸ் முறையை ஏற்படுத்தியவர்.

இந்தியாவில் சிவில் சர்வீஸ் முறையை ஏற்படுத்தியவர்.
விடை: ரிப்பன் பிரபு.
ஆங்கிலப் பாராளுமன்றம் எப்போது ஒழுங்குமுறை சட்டத்தை இயற்றியது
விடை:கி.பி.1773
இந்தியாவின் கடைசி முகலாயப் பேரரசர் இரண்டாம் பகதூர்ஶா எந்த நாட்டிற்கு ஆங்கிலேயர்களால் நாடுகடத்தப்பட்டார்?
விடை: பர்மா
கி.பி. 1854-ல் டல்ஹௌசி பிரபுவால் அறிமுகப்படுத்தப்பட்ட முக்கியமான துறை
விடை: பொதுப்பணித்துறை
தபால் மற்றும் தந்தி இலாகா இந்தியாவில் யாருடைய ஆட்சி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?
விடை: டல்ஹௌசி பிரபு.

கி.பி. 1878 ல் தாய்நாட்டு பத்திகைச் சட்டத்தை ரத்து செய்தவர்?
விடை: ரிப்பன் பிரபு.
இந்தியச் சங்கத்தை எற்படுத்தியவர்?
விடை: சுரேந்திரநாத் பானர்ஜி
சம்பல்பூர் பகுதியில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்திய தலைவர் யார்?
விடை: சுரேந்திர சாகி
கல்கத்தாவில் ஆசியச் சங்கத்தை நிறுவியவர்?
விடை: சர் வில்லியம் ஜாண்
இந்த்ய மறுமலர்ச்சியின் தந்தை என அழைக்கப்படுபவர்?
விடை: ராஜாராம் மோகன் ராய்


ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு எந்த நோக்கத்தில் வந்தனர்

ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு எந்த நோக்கத்தில் வந்தனர்?
விடை: வியாபாரம் செய்வதற்கு.
வாரிசுயில்லா கொள்கையை அறிமுகப்படுத்தியவர்.
விடை: டல்ஹளசி பிரபு.
ஜமீன்தார் முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர்.
விடை: கானிங் பிரபு.
யாருடைய ஆட்சிக்காலத்தில் வங்காளத்தில் நிலையான நிலவரித்திட்டம் அமுல்படுத்தப்பட்டது?
விடை: காரன் வாலிஸ் பிரபு.
முகலாயப் பேரரசின் கடைசி மன்னர் யார்?
விடை: இரண்டாம் பகதூர்ஶா.
வங்கப்பிரிவினையை அறிமுகப்படுத்தியவர்.
விடை: கர்சன் பிரபு.
தமிழ் நாட்டின் திலகர் என அழைக்கப்பட்டவர்.
விடை: வ.உ.சிதம்பரம்.
வங்கப் பிரிவினையின் முக்கிய நோக்கம்.
விடை: வங்காளத்தில் தேசீய ஒற்றுமையை பலவீனப்படுத்த.
ராணுவத்தில் சேருவதற்கான பொதுத்துறைச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
விடை: கி.பி.1856.
கி.பி.1856-ம் ஆண்டு ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு சட்டம் யாரால் இயற்றப்பட்டது?
விடை: கானிங் பிரபு.

Thursday, April 06, 2006

ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி

ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி எப்பொழுது நிறுவப்பட்டது.
விடை: கி.பி.1600.
478. தமிழ் நாட்டிலிருந்து காங்கிரஸ் கட்சியில் இருந்த தீவிரவாத பிரிவு உறுப்பினர்களுள் முக்கியமானவர்.
விடை: சுப்பிரமணிய சிவா.
ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் கப்பற்படையின் பெயர் என்ன?
விடை: பாம்பே மரைன்.
இந்தியாவில் கிறிஸ்துவ மதத்தை முதலில் போதனை செய்தவர்.
விடை: புனித தாமஸ்.
எப்போது ஆங்கில சட்டம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது?
விடை: ஆகஸ்ட் 1,1672.
சென்னையை பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து ஆங்கிலேயர்கள் எந்த உடன்படிக்கை மூலம் திரும்ப பெற்றனர்?
விடை: எய்லா ச்ப்பேல், 1749.
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் பின்பற்றிய கொள்கை.
விடை: பிரித்தாளும் கொள்கை.
இந்தியாவில் பிரிட்டிஶ் பேரரசை நிறுவ வழுவகுத்தவர் யார்?
விடை: ராபர்ட் கிளைவு.
பர்மாவை இந்தியாவின் ஒரு பகுதியாக பிரிட்டிஷ் அரசு எந்த ஆண்டு இணைத்துக் கொண்டது?
விடை: கி.பி.188620.
எந்தப் போருக்குப் பிறகு கிழக்கிந்திய கம்பெனி மெதுவாக தங்கள் படைபலத்தை பயன்படுத்தி இந்தியப் பகுதிகளை கைப்பற்றியது.
விடை: பிளாசிப் போர்.

Wednesday, April 05, 2006

கொள்குறி வகை வினாக்கள்

1.இந்தியாவுக்கு புதிய கடல் வழியை கண்டுபிடித்தவர் யார்?
விடை: வாஸ்கோடகாமா.
2.ஐரோப்பியர்களால் முதலில் கைப்பற்றப்பட்ட இந்தியப் பகுதி?
விடை: கோவா.
3.இந்தியாவுக்கு முதலில் விஜயம் செய்த ஐரோப்பியர் யார்?
விடை: நிக்கோலா கான்டி.
4.கிழக்கிந்திய கம்பெனியை நிறுவ ஒப்புதல் அளித்த இங்கிலாந்து மன்னர் யார்?
விடை: முதலாம் எலிசபெத்.
5.கி.பி 1613-ம் ஆண்டு ஐகாங்கீர் மன்னரின் ஒப்புதல் பெற்று தொடங்கப்பட்ட அயல்நாட்டு வியாபாரக் கம்பெனி எது?
விடை: போர்த்துக்கீசிய வியாபார கம்பெனி.
6.எளிதில் யாரும் கைபற்ற முடியாத பாதுகாப்பு அரணைக் கொண்டுள்ள கோட்டை இந்தியாவில் எங்குள்ளது?
விடை: கல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டை.
7.பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்த இந்தியப்பகுதி எது?
விடை: சந்திர நாகூர்.
8.இந்தியாவின் எந்த இந்தியப்பகுதி போர்துகீசியரின் ஆதிக்கத்தில் இதுந்தது.
விடை: டாமன்.
9.ஆங்கிலேயர்களின் முதல் தொழிற்சாலை இந்தியாவில் எங்கு
நிறுவப்பட்டது?

விடை: சூரத்.
10.ஆந்தித கேசரி என அழைக்கப்பட்டவர்.
விடை: பிரகாசம் ரெட்டி.

Tuesday, April 04, 2006

மின்னஞ்சல் கடிதங்களை வரிசைப்படுத்த

நமக்கு வரும் மின்னஞ்சல் கடிதங்களை நாம் படித்தவுடன் அழிப்பதில்லை.எதற்கும் இருக்கட்டும் என்று அப்படியே வைத்து விடுகிறோம்.தேவையற்ற கடிதங்களை அழித்தாலும் மெயில் பெட்டியில் நிறைய சேர்ந்து விடுகிறது.பின்னாளில் எந்த கடிதத்தையாவது தேடும்போது அதனைக் கண்டு பிடிப்பதில் குழப்பம் ஏற்படுகிறது. ஒருவரே அடிக்கடி நமக்கு கடிதம் எழுதுகையில் அவரிடமிருந்து வந்துள்ள பல கடிதங்களில் நாம் தேடும் குறிப்பிட்டகடிதம் எது என்பதைக் கண்டறியவும் நேரம் ஆகிறது. இதற்கு ஒரு வழி உள்ளது.
இவற்றை வரிசைப்படுத்தலாம். எம்.எஸ்.அவுட்லுக் அல்லது அவுட்லுக்
எக்ஸ்பிரஸ் மூலம் தங்கள் கடிதங்களை இறக்கிப் படிப்பவர்கள்
கீழ்க்கண்டவாறு செயல் படவும். இன்பாக்ஸினைக் கவனியுங்கள். அதன்
தலைப்பில் கட்டங்கள் மிதாக சில சில தலைப்புக்கள் இருக்கும். From, subject, Received, ect... என இவை இருக்கும். இதில் எந்ததலைப்பின் கீழ் நீங்கள் பிரித்து அடுக்க விரும்புகிறீர்களோ அதன் தலைப்பில் சென்று கிளிக் செய்திடுங்கள். கடிதங்கள் அனைத்தும் அதற்கேற்றவகையில்
அடுக்கப்பட்டுவிடும். அனுப்பியவர் வ்ரிசையில் பெற்ற நாள் வரிசையில் கடித அளவு வரிசையில் என பல வகைகளில் அடுக்கலாம். அதே போல இந்த வரிசை மாற்றிப் பெற வேண்டும்மெனில் மீண்டும் அப்போதைய
தேவைக்கேற்ப வரிசைப்படுத்தலாம். இதில் கர்சரை மேல் கட்டத்தில்
வைத்திடுகையில் அம்புக்குறி மேல் நோக்கி இருந்தால் கடிதங்கள் A to z or oldest date to newest என வரிசைப்படுத்தப்படும்.
மவுஸின் அம்புக்குறி கீள் நோக்கி இருந்தால் newest date to oldest
வரிசைப்படுத்தப்படும்.
படித்தவை

தெரியுமா?

1.நீண்ட சாலை-கிராண்ட் டிரங்க் சலை.
2. இந்தியாவில் மிக உயரமான நீர் வீழ்ச்சி-ஜோக் நீர்வீழ்ச்சி, மைசூர்.
3. இந்தியாவில் மிகப் பெரிய ஏரி-காஷ்மீரில் உள்ள ஊலர் ஏரி.
4."வெப்" என்ற கம்யூட்டர் நெட்வொர்க்கினை உருவாக்கியவர்- பெர்ன்ர்ஸ்ஸீ.
5.இந்தியாவில் ரயில்வே மியூசியம் அமைந்துள்ள இடம்-புது டில்லி.
6.இந்திய ராணுவத்தின் முதல் தலபதி ஜெனரல்-கே.எம்.கரியப்பா.
7.இந்தியாவில் ஐ எஸ் ஒ 9002 சான்றளிக்கப்பட்ட முதல் துறைமுகம்-தூத்துக்குடி

Monday, April 03, 2006

இருள்சேர்

இருள்சேர் இருவினையும் சேரா: இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.