Wednesday, April 05, 2006

கொள்குறி வகை வினாக்கள்

1.இந்தியாவுக்கு புதிய கடல் வழியை கண்டுபிடித்தவர் யார்?
விடை: வாஸ்கோடகாமா.
2.ஐரோப்பியர்களால் முதலில் கைப்பற்றப்பட்ட இந்தியப் பகுதி?
விடை: கோவா.
3.இந்தியாவுக்கு முதலில் விஜயம் செய்த ஐரோப்பியர் யார்?
விடை: நிக்கோலா கான்டி.
4.கிழக்கிந்திய கம்பெனியை நிறுவ ஒப்புதல் அளித்த இங்கிலாந்து மன்னர் யார்?
விடை: முதலாம் எலிசபெத்.
5.கி.பி 1613-ம் ஆண்டு ஐகாங்கீர் மன்னரின் ஒப்புதல் பெற்று தொடங்கப்பட்ட அயல்நாட்டு வியாபாரக் கம்பெனி எது?
விடை: போர்த்துக்கீசிய வியாபார கம்பெனி.
6.எளிதில் யாரும் கைபற்ற முடியாத பாதுகாப்பு அரணைக் கொண்டுள்ள கோட்டை இந்தியாவில் எங்குள்ளது?
விடை: கல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டை.
7.பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்த இந்தியப்பகுதி எது?
விடை: சந்திர நாகூர்.
8.இந்தியாவின் எந்த இந்தியப்பகுதி போர்துகீசியரின் ஆதிக்கத்தில் இதுந்தது.
விடை: டாமன்.
9.ஆங்கிலேயர்களின் முதல் தொழிற்சாலை இந்தியாவில் எங்கு
நிறுவப்பட்டது?

விடை: சூரத்.
10.ஆந்தித கேசரி என அழைக்கப்பட்டவர்.
விடை: பிரகாசம் ரெட்டி.

2 comments:

J S Gnanasekar said...

மூன்றாவது கேள்விக்கான பதில், தவறென நான் நினைக்கிறேன். எனக்குச் சரியாக ஞாபகமில்லை.

'ஐரோப்பாவின் பாட்டி' எனப் பெருமையாக அழைக்கப்படும், முதலாம் எலிசபெத், 'மன்னர்' அல்ல; 'ராணி'. அதாவது ஆண்பால் அல்ல; பெண்பால். உலகிலேயே, அதிக நாட்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த பெண் இவர்தான்.

பத்தாவது கேள்வியில், 'ஆந்திர கேசரி' என சரி செய்யுங்கள். (ஆந்திராவின் சிங்கம்)

சரி, ஏகாதிபத்தியம் பற்றி, நான் சில கேள்விகள் கேட்கிறேன்.

1) ஐரோப்பியர்களின் காலனி ஆதிக்கத்தில் சிக்காத ஒரே ஆசிய நாடு எது?

2) 'பாஸ்டன் தேநீர் விருந்து' என வரலாற்றில் கிண்டல் செய்யப்படும் நிகழ்ச்சியில், அட்லாண்டிக் கடலில் கொட்டப்பட்ட டீத்தூள், எந்தக் கம்பெனியால் தயாரிக்கப்பட்டது?

கேள்வி மட்டும் கேட்டுவிட்டு, பதில் சொல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். என் தளத்தில் கூட பதில் இல்லாமல், இரண்டு கேள்விகள் இருக்கின்றன.

-ஞானசேகர்

ராஜகுமார் said...

ஞானசேகர் அவர்களுக்கு வணக்கம். உங்கள் வினாக்களுக்கு எனக்கு பதில் அறியாம் பாடுஇல்லா தயவு செய்து அந்தவினாக்களின் விடைகளை எனக்கு கூறவும். நன்றி நண்பரே