Tuesday, July 10, 2007

ஒரு வெம்மையான பரிசு

நீ எனக்குப் பரிசளித்த புத்தகம்
மிகவும் வெதுவெதுப்பயிருந்தது -உன்
கலாப மார்பக மேட்டில்
அழுந்தியிருந்து வந்ததால்!

என் கண்களோடு லயித்து உரையாடியபடி
வெகு நேரம்
உன் மார்போடு அணைத்து வைத்திருந்தாய் அதனை...
உன் கைகளும் விரல்களும்
அலைபேசியின் மின்னூட்டிபோல
இயங்கியிருக்கக்கூடும்!

வெகு ஆர்வத்துடன் படிக்கிறேன் அதை
அதன் குளிர்வான வெப்பத்துக்காய்!

அதன் ஒவ்வொரு பக்கத்திலும்
மீண்டெழும் வெம்மை
கருப்பட்டி - சுக்கு - மல்லிக் காபியின்
அழுத்தமான ஆவியாய்
தீவிர மணத்துடன் என் முகத்தில் படர
ஆவியாகி மேலெழுகிறேன் நானும்
நீ அடிக்கடி பறந்து செல்லும்
அதே வான்பாதை வழியே.

நன்றி,
- நட்சத்ரன்

No comments: