எனக்குக் கொஞ்சம்
கற்றுக் கொடுங்கள்
வாழ்க்கைச் சதுரங்கத்தின்
காய்களை நகர்த்துவதற்கு
எதிரிக்கு எதிரிஎனக்கு
நண்பனென்று
விதியாகிப் போனதன்
விஞ்ஞான விளக்கத்தை
முரண்பாடுகள் தோன்றின்
முறிந்துபோகும் நட்பின்
சமன்பாடுகள் பற்றி
சரியான விளக்கத்தை
நேத்திரங்களின் வீச்சில்
நெகிழ்ந்துபோகும் அன்பின்
சூத்திரத்தை உணர்ந்துகொண்டு
சுகலயத்தில் திளைக்கின்ற
மாத்திரத்தில் எல்லாமே
மாறிப்போய் வெறுப்பாகி
ஆத்திரத்தைப் பிரசவிக்கும்
அதிசயத்தின் அர்த்தத்தை.
No comments:
Post a Comment