யு.எஸ்.பி(USB-Universal Serial Bus) என்பது கம்ப்யூட்டரை வேறு சாதனங்களுடன் வேகமாகத் தகவல் பரிமாறச் செய்திட தற்போது பயன்படுத்தப்படும் சாதனமாகும்.
இது பயன்படுத்த எளியதானது.செயல்பாட்டில் வேகமானது.பல்வேறு சாதனங்களை இதன் வழி பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போது வடிவமைக்கப்படும் கம்ப்யூட்டர்களில் நிச்சயமாக ஒன்று அல்லது இரண்டு யு.எஸ்.பி போர்ட்டுகள் அமைக்கப்படுகின்றன.பழைய கம்ப்யூட்டர்களில் யு.எஸ்.பி.1.0அல்லது 1.1. இருக்கும்.புதிய கம்ப்யூட்டர்களில் யு.எஸ்.பி. 2 இருக்கும்.
சரி, நம் கம்ப்யூட்டரில் எந்த வகை யு.எஸ்.பி. போர்ட் இருக்கிறது என எப்படி அறிந்து கொள்வது? அது ஒன்றும் கடினமான வேலை இல்லை. "My Computer"ல் வலது பக்கமாகக் கிளிக் செய்திடவும். பின்வரும் மெனுவில் "Properties"என்பதைத் தேர்ந்தெடுக்கவும். (அல்லதுControl Panel சென்று அதில் System என்ற பகுதிக்குச் செல்லவும். அதில் என்ற டேபைத் தேர்ந்தெடுக்கவும்.அதில் "Hardware" என்பதைக் கண்டறிந்து அதனை விரித்தால் என்ன வருகிறது என்று பாருங்கள்.அதில் "Enhanced" என்று வந்தால் அது யு.எஸ்.பி 2 ஆகும். இல்லை என்றால் அது வேகம் குறைந்த யு.எஸ்.பி 1.0 அல்லது 1.1 ஆகும்.
No comments:
Post a Comment