Monday, January 22, 2007

நாளைய நண்பன்.

கண்டமுதல் நிமிடம்
கனகாலம் பிரிந்தவர்போல்
எண்ணவைக்கும் நட்பில்
ஏற்படுமோர் சந்தோசம்
பாதங்களுக் கிதமான
பழையதொரு சப்பாத்தின்
ஆதரவைப்போல் மனத்தை
ஆட்படுத்தும் அன்பதனை
காரியமாகும்
கடைசிக் கணம்வரையில்
வீரியமொழுகாதிருக்கும்
விந்தைச் சினேகிதத்தை
சுயலாபத் துணில்
முதுகு சொறிந்துகொள்ளும்
நியமத்தில் வாழும்
நிழல் வளைந்த மனிதர்களை
தோழமை என்னும்
தொல்லைகளே இல்லாத
நாளைய நண்பனை
இனங்க்கண்டு கொள்வதை
எனக்குக் கொஞ்சம்
கற்றுக் கொடுங்கள்.