நீங்கள் அடிக்கடி காணவிரும்பும் இணைய தளத்திற்கு ஒரு ஶார்ட்
கட் இருந்தால் மிகவும் வசதியாக இருக்கும் அல்லவா? அதனைல்
கிளிக் செய்தால் இணைய இணைப்பில் நேராக அந்த தளத்திற்குச்
செல்லலாம் அல்லவா? ஆம் அதற்கும் ஒரு ஶார்ட் கட் அமைத்திட
முடியும். இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் இணைய தள முகவரி
அமைத்திடும் இடத்தை அடுத்து நீலக் கலரில் ஒரு சிறிய கட்டம்
என்ற எழுத்துடன் இருப்பதனைப் பார்க்கலாம். நீங்கள் விரும்பும்
இணையதளத்தைப் பார்த்துக் கொண்டிருக்கையில் பிரவுசரின்
விண்டோவைச் சிறிதாக்கவும். வலது மேல் மூலையில் உள்ள
மூன்று கட்டங்களில் நடுவில் இருக்கும் கட்டத்தில் கிளிக் செய்தால்
சிறியதாகிவிடும். இப்போது பிரவுசர் விண்டோவும் மானிட்டர்
திரையும் தெரியும் அல்லவா? இனி அந்தக் கட்டத்தில் மவுஸை
வைத்து இடது பட்டனை அழுத்தியவாறே இழுத்து வந்து
மானிட்டரின் டெஸ்க்டாப் திரைப் பகுதியில் விட்டுவிடவும்.
கிடைக்கும் ஐகான்தான் ஷார்ட் கட் வழுயாகும். இனி இதனை
ழுத்தினால் நீங்கள் பார்த்துக் கொண்டிருந்த தள்த்திற்கு அழைத்துச்
செல்லப்படுவீர்கள்.
நெட்ஸ்கேப் பயன்படுத்துபவர்கள் இதே போல இணைய தளம்
முகவரியை அடுத்து உள்ள சிறிய ஐகானை இழுத்து வந்து
திரைப்பகுதியில் விடவும். இண்டர்நெட் இணைப்பில் இருக்கையில்
இந்த ஷார்ட்கட்களை கிளிக் செய்தால் அது உங்களின் பிரவுசரைத்
திறந்து அந்த தளத்திற்கு உங்களைக் கொண்டு செல்லும்.
5 comments:
Fine.
Continue like this
Thanks
புதிய தகவல் அறிய தந்தமைக்கு நன்றி.
நன்றி.
எளிய நுட்பங்கள் கூட பகிர்ந்து கொள்ளுதலின் மூலம் பலருக்கும் பயனாகிறது. எளியது என்பதாலேயே பலரும் பகிர நினைக்காதவை இது போன்ற தகவல்கள்.
பிரவுசர் மெனுவில் File -> send -> shortcut to Desktop இம்முறையிலும் இதே ஷார்ட்கட்டை உருவாக்கலாம்.
Ok Rajakumar, Pothumaa!!! Click panniyachi .
Post a Comment